ஐ.டி.டி.யில் டெய்லரின் மகனோடு என் பையன் படிக்க இருப்பது எனக்கு சந்தோஷம்தான்…. அரவிந்த் கெஜ்ரிவால்

 

ஐ.டி.டி.யில் டெய்லரின் மகனோடு என் பையன் படிக்க இருப்பது எனக்கு சந்தோஷம்தான்…. அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி அரசு வழங்கிய இலவச கோச்சிங்கால் டெய்லரின் மகனுக்கு ஐ.டி.டி.யில் அட்மிஷன் கிடைத்துள்ளது. அந்த பையனோடு என் மகனும் சேர்ந்து படிக்க இருப்பது எனக்கு மகிழ்ச்சி என அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் தெரிவித்தார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. கெஜ்ரிவால் அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நுழைவுத் தேர்வுகளுக்காக இலவச கோச்சிங் வகுப்புகளை டெல்லி அரசு வழங்கி வருகிறது. அதற்கு நல்ல பலனும் உள்ளது. இந்த இலவச வகுப்புகளில் படித்த டெய்லரின் மகன் ஒருவருக்கு ஐ.டி.டி.யில் அட்மிஷன் கிடைத்துள்ளது.

டெல்லி ஐ.ஐ.டி.

அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக டிவிட்டரில், விஜய குமாரின் அப்பா டெய்லர். அவரது அம்மா குடும்ப பெண். டெல்லி அரசு அவருக்கு இலவச கோச்சிங் வழங்கியதால், அவருக்கு மதிப்புமிக்க ஐ.டி.டி.யில் அட்மிஷன் கிடைத்துள்ளதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறேன். பாபா சாகேப்பின் (பி.ஆர்.அம்பேத்கர்) இந்த பார்வையை டெல்லி அரசால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

என் பையனும், டெய்லரின் பையனும் ஒரே நேரத்தில் ஐ.டி.டி.யில் படிப்பார்கள் என்பது எனக்கு சந்தோஷம். நல்ல கல்வி இல்லாததால் ஏழை மனிதன் தொடர்ந்து ஏழையாக இருக்கும் பாரம்பரிய இங்கு உள்ளது.  நல்ல தரமான கல்வியை வழங்கினால் ஏழை-பணக்காரர் இடையே உள்ள வெற்றிடம் இல்லாமல் போகும் என பதிவு செய்து இருந்தார்.

கெஜ்ரிவால் குடும்பம்

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மகன் புல்கிட் சென்ற ஆண்டு 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் 96.4 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ல் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலும் அந்த தேர்வில் 96 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.