ஐ.ஏ.ஸ். அதிகாரி ஓட்டிய கார்மோதி பத்ரிகையாளர் பலி! கேரளாவில்!

 

ஐ.ஏ.ஸ். அதிகாரி ஓட்டிய கார்மோதி பத்ரிகையாளர் பலி! கேரளாவில்!

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் விபத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையி முடிவில், காரை ஓட்டியது வெங்கிட்டராமன்தான் என்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது.

ஸ்ரீராம் வெங்கிட்டராமன், கேரள மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி. மேற்படிப்புக்காக விடுமுறையில் சென்று, பணிக்கு திரும்பியபோது, சர்வே இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு சில நாட்கள்தான் ஆகிறது. நேற்று நள்ளிரவில் தோழி ஒருவருடன் காரில் அதிவேகமாக சென்றதில், கட்டுப்பாட்டை இழந்து பைக்கில் சென்ற பத்ரிகையாளர்மீது மோதியதில், பத்ரிகையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். கை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது வாக்குமூலத்தில் காரை தான் ஓட்டவில்லை என்றும் தனது தோழிதான் ஓட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.
 

Accident Spot

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் விபத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையி முடிவில், காரை ஓட்டியது வெங்கிட்டராமன்தான் என்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, அதிகாரியிடமிருந்து மது நெடி அடித்ததாக, அவரை பரிசோதித்த டாக்டர் கூறினாலும், போலீசார் கேட்டுக்கொள்ளாததால், ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ரத்த சோதனை நடத்தப்படவில்லை என்று சொல்லிவிட்டார். உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மட்டும் பணியில் இருக்கும் போலீசாருக்கு சட்டென அடிப்படை நடைமுறைகூட மறந்துவிடுகிறது. இனி பத்ரிகையாளர்கள் சங்கம் இறந்தவருக்காக நிதி திரட்டும், ஐ.ஏ.எஸ். அதிகாரி 2000 ரூபாய் ஃபைன் கட்டிவிட்டு டூட்டிக்கு போய்விடுவார்! எவ்வளவு கேஸைப் பார்த்திருப்போம்!