ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு!

 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில்   முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 

புதுடெல்லி:  ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில்   முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 

கடந்த 2007ம் ஆண்டு, சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது, மேலும் இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திற்கும் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகக் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி வருகின்றது. 

CHIDAMBARAM

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் கடந்த ஆண்டு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் இதன் மீதான உத்தரவைப் பிறப்பிக்காமல் கடந்த ஜனவரி 25ம் தேதி வழக்கை ஒத்திவைத்தது. இந்த வழக்கின் விசாரணைக்குச் சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்று கூறிய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கவேண்டும் என்று வலியுறுத்தின. 

HC

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி  தாக்கல் செய்த மனுவை  இன்று தள்ளுபடி செய்தது. மேலும் மேல்முறையீடு செய்ய 3 நாட்கள் அவகாசம்  வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.