ஐஸ் வாட்டர் குடித்தால் உடல் சூடு குறையுமா…இந்த பச்சடியை ட்ரை பண்ணுங்க…

 

ஐஸ் வாட்டர் குடித்தால் உடல் சூடு குறையுமா…இந்த பச்சடியை ட்ரை பண்ணுங்க…

வெயில் காலத்தில் பொதுவாகவே உடலின் வெப்பநிலை சற்று கூடுதலாகவே இருக்கும். நாள் முழுக்க ஐஸ் வாட்டரைக் குடித்தால் உடலின் வெப்பநிலை குறைந்துவிடும் என்றும் சிலர் நம்புகிறார்கள். அதெல்லாம் வெறும் நம்பிக்கைதான்.

வசதியாக இருப்பவர்கள் ஜம்முன்னு ஏஸி ரூமில் இருந்துகொண்டு வெயிலை சமாளித்துக் கொள்வார்கள். எல்லோராலும் அப்படி இருக்க முடியுமா? இப்போ எலெக்சன் நேரம் என்பதால்,இப்போதைக்கு பவர் கட் இல்லாமல் இருக்கிறது ; எல்லா நாளுமே இப்படியே இருக்கும் என்று சொல்லமுடியாது!

தவிர,வெயில் காலத்தில் பொதுவாகவே உடலின் வெப்பநிலை சற்று கூடுதலாகவே இருக்கும். நாள் முழுக்க ஐஸ் வாட்டரைக் குடித்தால் உடலின் வெப்பநிலை குறைந்துவிடும் என்றும் சிலர் நம்புகிறார்கள். அதெல்லாம் வெறும் நம்பிக்கைதான். நிஜமாகவே உடலை குளுமையாக வைத்து கொள்ள வேண்டுமா? இதோ ஜவ்வரிசி தயிர் பச்சடி தயார்… 

தேவையான பொருட்கள் 

javarisi

ஜவ்வரிசி – 1 கப் 
வெங்காயம் – 1/2 கப் 
கேரட் – 1/2 கப் 
வெள்ளரிக்காய் – 1/2 கப் 
பச்சை மிளகாய் – 2
சாட் மசாலா – 1/2 tsp 
தயிர் தேவையான அளவு
கடுகு,உப்பு – சிறிதளவு 

செய்முறை 

ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து பின்பு வடிகட்டி எடுத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை காயவைத்து கடுகு தாளித்து, ஜவ்வரிசியை அத்துடன் சேர்த்து சிறிது நேரம் வறுக்க வேண்டும். அதோடு வெங்காயம் ,கேரட் மற்றும் பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு வெள்ளரிக்காய், சாட் மசாலா மற்றும் உப்பை சேர்க்கவும்.

javarisi

சூடு ஆறியபின் தயிரை சேர்த்து விடவும். ருசியான ஜவ்வரிசி தயிர் பச்சடி தயார்.தொண்டை குழிக்குள் இறங்கும் போதே தெரியுதா ‘ஜ்ஜில்நெஸ்’…என்ஜாய்.

இதையும் படிங்க: குழாய் புட்டு எப்படி செய்வது?