ஐஸ் ப்ளூ நிறத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

 

ஐஸ் ப்ளூ நிறத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

ஐஸ் ப்ளூ நிறத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பெய்ஜிங்: ஐஸ் ப்ளூ நிறத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சீனாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் புதியதாக ஐஸ் ப்ளூ நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் முதன்முறையாக சாம்சங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் கிரேடியன்ட் ஸ்டைல் கலர் ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன்கள் கோரல் ப்ளூ, பர்கண்டி ரெட், லைலாக் பர்பிள், மிட்நைட் பிளாக், சன்ரைஸ் கோல்டு மற்றும் டைட்டானியம் கிரே ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்த புதிய நிறம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் ப்ரீ-ஆர்டர் விற்பனை சீனாவில் தொடங்கியுள்ளது. தற்போது 128 ஜிபி வேரியன்ட்களுக்கான விற்பனை மட்டும் தொடங்கியிருக்கிறது.

இந்த நிறம் கொண்ட கேலக்ஸி எஸ்9 மாடலின் விலை சீன மதிப்பில் 5,499 யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.57,000) என்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலின் விலை சீன மதிப்பில் 6,499 யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.67,400 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்தியா உட்பட பிற நாடுகளிலும் ஐஸ் ப்ளூ நிறம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.