ஐஸ் கிரீமை சுவைத்த பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை? காரணம் இதுதானாம்!

 

ஐஸ் கிரீமை சுவைத்த பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை? காரணம் இதுதானாம்!

அமெரிக்காவில் உணவை சேதப்படுத்துவது கடுமையான குற்றம் என்பதால் இந்த விவகாரம் போலீசார் கவனத்திற்குச் சென்றது.

அமெரிக்கா: ஐஸ் கிரீம் கண்டெய்னர் ஒன்றை திறந்து சுவைத்துவிட்டு மீண்டும் பிரிட்ஜுக்குள் வைத்து மூடிச் சென்ற இளம்பெண்ணை  போலீசார் தேடி வருகின்றனர். 

 

அமெரிக்காவின் டெக்சாசில் சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்ற வந்த  இளம்பெண் ஒருவர், ஐஸ் கிரீம் கண்டெய்னர் ஒன்றை திறந்து சுவைத்துவிட்டு மீண்டும் பிரிட்ஜுக்குள் வைத்து மூடிவிட்டுச் சென்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவிற்கு எதிர்மறையான கருத்துக்கள் வந்தன. 

 

இந்நிலையில் அமெரிக்காவில் உணவை சேதப்படுத்துவது கடுமையான குற்றம் என்பதால் இந்த விவகாரம் போலீசார் கவனத்திற்குச் சென்றது.  இதனால் அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் அடிப்படையில் அடையாளம் காணும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர். ஒருவேளை அந்த பெண் அடையாளம் காணப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.