ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை மீம்: பகிரங்க மன்னிப்பு கேட்ட விவேக் ஓபராய்

 

ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை மீம்: பகிரங்க மன்னிப்பு கேட்ட விவேக் ஓபராய்

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சை கருத்து  பதிவிட்ட நடிகர் விவேக் ஓபராய் வருத்தம் தெரிவித்துள்ளார். 

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சை கருத்து  பதிவிட்ட நடிகர் விவேக் ஓபராய் வருத்தம் தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் முழுமையாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இது குறித்து நடிகர் விவேக் ஓபராய் தனது டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய மீம்ஸை பதிவிட்டார். அதில், ஐஸ்வர்யா ராய்  சல்மான் கானுடன்  உள்ள புகைப்படத்தைக் கருத்துக் கணிப்பு என்றும், ஐஸ்வர்யா ராய் தன்னுடன் உள்ள படத்தைத் தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு என்றும் ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சன், மகள் மகள் ஆகியோர் கொண்ட படத்தைத் தேர்தல் முடிவுகள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

vivek

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி இப்படி கொச்சையாக விமர்சிக்கலாம் என்றும் பல்வேறு தரப்பினரும் கண்டன குரல் எழுப்பினர். குறிப்பாக விவேக் ஓபராயின் ட்வீட்டுக்கு தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியது.

vivek

இது குறித்து கருத்து  தெரிவித்த விவேக் ஓபராய், ‘ நான்  தவறு செய்ததாக நினைக்கவில்லை. எதற்காக இதைப் பெரிய விஷயமாக ஆக்குகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்குச் சிலர் இந்த மீம்ஸை அனுப்பினார்கள், நான் சிரித்தேன். அவ்வளவுதான். இதை ஏன்  அரசியலாக்குகிறார்கள் என்பது தெரியவில்லை’ என்றார். 

 

 

இந்நிலையில் தற்போது  ஐஸ்வர்யா ராய் குறித்த  பதிவுக்கு விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ சில சமயங்களில் ஒரு  விஷயமானது  வேடிக்கையாகத் தெரிந்தாலும், தாய் பலர் அப்படி எடுத்துக் கொள்வதில்லை. நான் 2000 பெண் குழந்தைகளைக் காப்பாற்றியவன். நான் பெண்ணை எப்போதும் அவமரியாதை செய்ய எண்ணியது இல்லை. என்னுடைய பதிவு ஒரு பெண்ணை பாதித்துள்ளது என்றால் அதற்கு நான் பரிகாரம் தேடிக்கொள்ள நினைக்கிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ட்வீட் நீக்கப்பட்டுவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.