ஐஸ்வர்யா ராஜேஷ்காக புரமோஷன் செய்யும் பிரபல கிரிக்கெட் வீராங்கனை

 

ஐஸ்வர்யா ராஜேஷ்காக புரமோஷன் செய்யும் பிரபல கிரிக்கெட் வீராங்கனை

ஐஸ்வர்யா ராஜேஷ் படத்திற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் புரமோஷன் செய்யவுள்ளார். 

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் படத்திற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் புரமோஷன் செய்யவுள்ளார். 

தமிழில் கடந்த ஆண்டு இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான படம் கனா. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ள அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடுத்து. 

அதைதொர்ந்து இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகவுள்ளது.கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் புரமோஷன் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கௌசல்யா என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். அதேபோல் சிவகார்த்திகேயனும் வில்சன் என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். படத்திற்கு கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

ishwarya

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளது. அதில்  இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் கலந்து கொண்டு படத்தை புரொமோஷன் செய்யும் வேலையில் இறங்கவுள்ளார். மேலும் நடிகை ராஷி கண்ணாவும் சிறப்பு விருந்தினராக இதில்  கலந்து கொள்கிறார். மேலும் இது குறித்த போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.