ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் நாக்கில் ரத்தக்கசிவு..5 பேருக்குச் சிகிச்சை : அதிர்ச்சி சம்பவம்!

 

ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் நாக்கில் ரத்தக்கசிவு..5 பேருக்குச் சிகிச்சை : அதிர்ச்சி சம்பவம்!

கோடைக்காலம் தொடங்க உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் அதனை வாங்கி சாப்பிடுவார்கள்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ஓவைசி என்னும் நகரைச் சேர்ந்தவர் பயாஸ் அலிகான். இவர் நேற்று இவரது குடும்பத்தினருடன் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அங்கே வந்த தள்ளுவண்டியில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் 4 பேருக்கும் வாங்கி கொடுத்துள்ளார். ஐஸ்கிரீம் கொடுத்தவுடன் அந்த நபர் அங்கிருந்து செல்ல, இவர்கள் 5 பேருக்கும் நாக்கில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் பின் நாக்கில் வெடிப்பு ஏற்பட்டு அதிலிருந்து ரத்தம் கசிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். 

ttn

சிகிச்சை முடிந்த பின்னர் பயாஸ் அலிகான் சந்தோஷ் நகர் காவல் நிலையத்துக்கு சென்று இதனைப் பற்றி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் அவர்களுக்கு ஏற்பட்ட ரத்தக்கசிவு, சுகாதாரமற்ற முறையில் அவை தயாரிக்கப்படுவதால்  ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அந்த ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் அசுத்தமானது என்றும் அவற்றைக் குளிரச் செய்யும் ஐஸ்கட்டிகளும் சுகாதாரமற்றது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ttn

ஐதராபாத்தில் இரவு, பகலாகத் தள்ளு வண்டிகளில் ஐஸ்கிரீம் விற்கப்பட்டு வரும் நிலையில், கோடைக்காலம் தொடங்க உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் அதனை வாங்கி சாப்பிடுவார்கள். அதனால், இந்த புகார் பற்றி உடனே நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.