ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இன்று நள்ளிரவு முதல் பிரிட்டன் வெளியேறுகிறது

 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இன்று நள்ளிரவு முதல் பிரிட்டன் வெளியேறுகிறது

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இன்று நள்ளிரவு முதல் முழுவதுமாக பிரிட்டன் வெளியேறுகிறது.

பிரசல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இன்று நள்ளிரவு முதல் முழுவதுமாக பிரிட்டன் வெளியேறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் மசோதா குறித்து கடந்த 2016-ஆம் ஆண்டு அந்நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பான்மையாக ஆதரவு கிடைத்ததை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. ஆனால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு பாராளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாததால், இரண்டு முறை பிரிட்டன்  பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்று இரண்டு முறை பிரதமர்களும் மாறினர்.

இதை அடுத்து தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால் பிரெக்சிட் வரைவு மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற ஒப்புதலை தொடர்ந்து பிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தும் சம்மதித்தார். இதனை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முழுவதும் வெளியேறுவதற்கான ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முழுவதுமாக பிரிட்டன் வெளியேறுகிறது.