ஐரா திரைப்பட ஸ்னீக் பீக்: மரண பீதியில் நயன்தாரா!

 

ஐரா திரைப்பட ஸ்னீக் பீக்: மரண பீதியில் நயன்தாரா!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஐரா படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது. 

சென்னை: நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஐரா படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது. 

அஜித்-நயன்தாரா நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘விஸ்வாசம்’ வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐரா’ திரைப்படம் வரும் நாளை வெளியாகவுள்ளது.

airaa

முதல் முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தை லட்சுமி மற்றும் மா போன்ற  குறும்படங்களில் இயக்கிய சர்ஜூன் இயக்கியுள்ளார். இதில் யோகிபாபு,கலையரசன், ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட சிலர் நடித்துள்ளனர். 

airaa

இந்நிலையில் இப்படத்தின் ரிலீசையொட்டி, அதற்கான புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாகப் படக்குழு ஈடுபட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக இப்படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. திகில் காட்சிகள் கொண்ட இந்த சில நிமிட காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதையும் படிங்க: 83 பட அப்டேட்: ரன்வீர் சிங்கிற்கு கிளாஸ் எடுக்கும் கபில்தேவ்வின் மகள்!