ஐயோ பத்திக்கிச்சு… பத்திக்கிச்சு! சுவிட்ச் ஆஃப்பிலிருந்த ஒன்பிளஸ் ஃபோன் திடீரென எரிந்ததால் பரபரப்பு!!

 

ஐயோ பத்திக்கிச்சு… பத்திக்கிச்சு! சுவிட்ச் ஆஃப்பிலிருந்த ஒன்பிளஸ் ஃபோன் திடீரென எரிந்ததால் பரபரப்பு!!

சுவிட்ச் ஆப்பில் இருந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சுவிட்ச் ஆப்பில் இருந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அண்மைக்காலமாக பிரபலமாக உலாவரும் செல்போன்களே அதிகம் எரிந்துவருகின்றன. விலை மலிவாகவும் சகல  வசதிகளும் உள்ள ரெட்மி நிறுவன ஸ்மார்ட்போன்களே அதிகம் வெடித்து, தீப்பிடித்து எரியும் பிரச்னைகளில் சிக்கியது. தற்போது விலையுயர்ந்த செல்போன்களான ஒன்பிளஸ், சாம்சங் போன்ற ஸ்மார்ட்போன்களும் இந்த பட்டியலில் இணைந்துள்ளன. இத்தனை நாட்கள் ஆனிலிருக்கும் செல்போன்கள் தான் எரிந்ததாகவோ, வெடித்ததாகவோ கேள்விப் பட்டிருப்போம், ஆனால் முதல் முறையாக தற்போது சுவிட்ச் ஆஃப்பிலிருந்த ஸ்மார்ட்போன் எரிந்துள்ளது. 

One plus

ஹிமாலியன் என்பவரது ஒன் பிளஸ் ஸ்மார்போன் திடிரென எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏசி அறையில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த ஹிமாலியனுக்கு காலை எழுந்தவுடன் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அவர் ஸ்விட்ச் ஆப் செய்து தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த ஒன்பிளஸ் 1 ஸ்மார்ட்போனிலிருந்து புகை வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் ஹிமாலியன், போன் வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் போனை தூக்கி தண்ணீரில் போட்டுள்ளார். 

இதையடுத்து தீபிடித்த எரிந்த போனை போட்டோ எடுத்து, ஒன்பிளஸ் நிறுவனத்துக்கு இமெயில் மூலம் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அளித்துள்ள புகார் கடிதத்தில், ‘போன் சுவிட்ச் ஆப்பில் தான் இருந்தது. அப்படி இருந்தும் அது எப்படி தீ பிடித்தது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஒன்பிளஸ் நிறுவனம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 2014 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் என்பதால் போனிலிருந்து நச்சு புகை வெளிவந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது.