“ஐயோ நைண்ட்டி போடாம நைட்லாம் தூக்கம் வரலே”- குடிமகன்களுக்கு திண்டாட்டம், ஆன்லைன் மோசடியில் கொண்டாட்டம்..  

“ஐயோ நைண்ட்டி போடாம நைட்லாம் தூக்கம் வரலே”- குடிமகன்களுக்கு திண்டாட்டம், ஆன்லைன் மோசடியில் கொண்டாட்டம்..  

மும்பையைச் சேர்ந்த ஒரு ரத்த புற்றுநோய் நோயாளிக்கு மது இல்லாமல் தூக்கம் வராது. அதனால் இந்த ஊரடங்கு நேரத்தில் ஆன்லைனில் மதுவாங்க அவர் தனது வீட்டிற்கே மதுகொண்டு வந்து கொடுப்பதாக கூறியவரிடம் தனது கிரெடிட் கார்டு மற்றும் ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) விவரங்களை பகிர்ந்து கொண்டதால் ரூ.60000 பணத்தை இழந்தார்.

அந்தப் பெண் கடந்த 18 மாதங்களாக புற்றுநோய் சிகிச்சை பெற்று வருகிறார். அந்தப் பெண்ணின் கூற்றுப்படி, அவர் ஒவ்வொரு இரவும் நன்றாக தூங்க மதுவை உட்கொள்கிறார். மாநிலம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில், அந்தப் பெண் மது கிடைக்காமல் திண்டாடினார். 
ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு, அந்த பெண் தன்னுடைய நண்பர் கொடுத்த ஒரு ஆன்லைன் மதுக்கடையின் எண்ணைத் தொடர்பு கொண்டு மது ஆர்டர் செய்தார். 
அந்த ஆன்லைன் நபர் மதுவை வழங்க ஒப்புக்கொண்டார். ஆனால்  முதலில் பணம் அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த பெண்ணின்  கிரெடிட் கார்டு விவரங்களையும், வங்கி அனுப்பிய OTP யையும் பகிர்ந்து  கொள்ளுமாறு அந்த நபர் கேட்டார். அவரின் பேச்சை நம்பி அந்தப் பெண் தனது அட்டை விவரங்களையும், OTP யையும் பகிர்ந்து கொண்டபிறகு , ​​அவரது அக்கௌன்ட்டிலிருந்து ரூ.19,000 எடுக்கப்பட்டதாக செய்தி வந்தது.

online-theft-78

இதனால் அதிர்ச்சியுற்ற அந்தப் பெண் மீண்டும் அவருக்கு போன் செய்து கேட்டபோது , ​​தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்தத் தொகை பெறப்பட்டதாக அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் அந்த நபருடன்  மற்றொரு OTP ஐப் பகிர்ந்து கொண்டார். உடனே மறுபடியும் அவரது கணக்கிலிருந்து ரூ .41,000 எடுக்கப்பட்டது .இந்த முறையும் அந்த நபர் தொழில்நுட்ப குறைபாட்டைக் குற்றம் சாட்டியதால், அந்த பெண் சந்தேகப்பட்டு கணவரிடம் இந்த சம்பவம் குறித்து கூறினார்.பிறகு அந்த தம்பதியினர் போலீசில் புகாரளித்தனர்.