ஐயோ நாட்டு மக்கள் எல்லாம் இப்படி கொரோனாவுக்கு பலியாகுறாங்களே…. தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர்

 

ஐயோ நாட்டு மக்கள் எல்லாம் இப்படி கொரோனாவுக்கு பலியாகுறாங்களே…. தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர்

சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 199 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் இதுவரை 32000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸால் பல நாடுகளின் நிலை மோசமாகியுள்ள நிலையில், இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள் மரணக்குழியில் தள்ளப்பட்டிருக்கின்றன. 

8 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியில் 58 ஆயிரத்து 247 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 455 பேர் உயிரிழந்துள்ளனர். 

germany minister

இந்நிலையில் கொரோனா வைரஸால் நாடு சந்திக்கபோகும் பொருளாதார சீரழிவுகள் குறித்த கவலையால் ஜெர்மன் நாட்டு நிதியமைச்சர் தோமஸ் என்பவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். 54 வயதான தோமச் ஹெஸ்ஸி என்ற மாகாணத்தின் நிதியமைச்சராக கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றிவருகிறார். இவர் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை எவ்வாறு சரிசெய்யப் போகிறோம் என மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகவும், சடலம் ரயில் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டதாகவும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நிதியமைச்சரின் உயிரிழப்பு நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியையும், மீளாத்துயரையும் கொடுத்திருக்கிறது.