ஐயா எங்க ஊர்ல 67 லட்சத்துல போட்ட தார் ரோட்டைக் காணோம்யா’…கதறும் அப்பாவி மக்கள்…

 

ஐயா எங்க ஊர்ல 67 லட்சத்துல போட்ட தார் ரோட்டைக் காணோம்யா’…கதறும் அப்பாவி மக்கள்…

வடிவேலு ஒரு படத்தில் ‘ஐயா என் கிணத்தைக் காணோம். கிணறு தோண்டுன ரசீது என்கிட்ட இருக்கு’ என்று கலாட்டா செய்வது போலவே ஒரு கிராமத்தில் 67 லட்சத்துக்கு சாலை போட்ட ரசீது இருக்கிறது.

வடிவேலு ஒரு படத்தில் ‘ஐயா என் கிணத்தைக் காணோம். கிணறு தோண்டுன ரசீது என்கிட்ட இருக்கு’ என்று கலாட்டா செய்வது போலவே ஒரு கிராமத்தில் 67 லட்சத்துக்கு சாலை போட்ட ரசீது இருக்கிறது. ஆனால் சாலையை மட்டும் காணவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது இடைக்கழிநாடு பேரூராட்சி. அதன்கீழ் வருகிறது தார் சாலை வேண்டி பல ஆண்டுகளாக போராடும் கோட்டைக்காடு கிராமம். கோடை கால காற்றில் மணலும், தூசியுமாக முகத்தை மூடி பயணிக்கும் அந்த கிராம மக்கள், மழை காலங்களில் சேறும், சகதியுமான சாலையில் படும் அவதிகள் சொல்லி மாளாதவை. 

rpad

பிரதான சாலை, பள்ளிக் கூட சாலை, குறுக்கு சாலை, மயான சாலை ஆகியவை மருந்துக்கு கூட தாரை பார்க்காதவை. தார் சாலை அமைக்க வேண்டி பலமுறை மனுக்களை அளித்தும் பலனில்லை என்று கூறும் கிராம மக்கள்,  அதிகாரிகளிடம் மீண்டும் மீண்டும் இதே கோரிக்கையை முன் வைத்தனர். 

road

தொடர்ந்து நச்சரித்த மக்கள் மீது இரக்கப்பட்டு ஃபைல்களை செக் பண்ணிய அதிகாரிகள், அந்த சாலைகள் தற்போதுதான் தார் இட்டு செப்பனிப்பட்டதாகவும், மீண்டும் செப்பனிட இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என  கூறியுள்ளனர். அதாவது சாலை போடப்பட்டுள்ளதா என்று செக் பண்ணாமல் ரூ.67 லட்சம் ஏப்பம் விடப்பட்டுள்ளது.

doc

67 லட்சம் ரூபாய் செலவில் சாலை போடப்பட்டுள்ளதாக ஆவணம் உள்ளது. ஆனால் சாலை இல்லை. இந்த காண்டிராக்டை ஓகே செய்த அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் சல்லிக்காசு செலவழிக்காமல் நோன்பு கொண்டாடியிருக்கிறார்கள். ஊர் மக்களின் தார் ரோடு கனவை நினைத்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழி?