ஐயய்யோ… இனி தமிழிசையை பார்க்க முடியாதோ..? காது கிழிக்க பாஜகவில் கடும் போட்டி..!

 

ஐயய்யோ… இனி தமிழிசையை பார்க்க முடியாதோ..? காது கிழிக்க பாஜகவில் கடும் போட்டி..!

தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிடும் தலைவர்களின் முடிவுகள் ஒரு வேலை அவர்களுக்கு எதிராக அமைந்தால் அவர்களும் தலைவர் இடத்திற்கான போட்டியில் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில் அடுத்த தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் பதவிக்கு வரப்போவது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. காரணம் இரு  முறை தமிழகத்தின் பாஜக தலைவராக வழிநடத்திய தமிழிசை சவுந்தரராஜனின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது.

இந்நிலையில் பலரும் டெல்லிக்கு படையெடுத்து  தமிழக பாஜக தலைவர் பொறுப்பை கைப்பற்றும் ரேஸில் இறங்கி உள்ளனர். தற்போது தமிழக பாஜகவில் முன்னணி தலைவர்களாக உள்ள ஹெச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், கருப்பு முருகானந்தம், கே.டி.ராகவன் மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயர்கள்  அடிபடுகின்றன.ஹெச்.ராஜா

ஹெச். ராஜாவை பொறுத்தவரை தற்போது சிவகங்கை தொகுதியின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறார். அவர் சிவகங்கை தொகுதியில் வெற்றிபெறும் பட்சத்தில் நிச்சயம் மத்திய அமைச்சர் ஆவார். எனவே தற்போதுவரை அவர் தலைவர் பதவிக்கு முயற்சி செய்யவில்லை. ஒருவேளை தோல்வியை தழுவினால் தேர்தலுக்கு பிறகே அது குறித்து யோசிப்பார்.

நிர்மலா சீதாராமன் மீண்டும் பாஜக அரசாங்கத்தில் மத்திய அமைச்சராக வருவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது. அவர் தேசிய அரசியலில் இருப்பதால் மாநில அரசியலில் ஈடுபடுவது குறித்து தற்போதுவரை அவர் முயற்சி செய்யவில்லை என்கிறார்கள்.தமிழிசை

கருப்பு முருகானந்தம் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். அதிரடியாக பேசக்கூடியவர். முக்குலத்தோர் அகமுடையார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவருக்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.  கே.டி.ராகவன் தொலைக்காட்சி விவாதங்களின் மூலம் அதிகம் பாஜகவினர் மத்தியில் பிரபலமானவர். அனைவரையும் அரவணைத்து செல்வார் என்ற நம்பிக்கையில் அவரது பெயரும் பரிசீலனையில் இருப்பதாக கூறுகிறார்கள்.வானதி

வானதி ஸ்ரீனிவாசன் திருப்பூர் மற்றும் கோவை தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடுவதற்கு மக்களவை தேர்தலில் வாய்ப்பு கேட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. மாநில தலைவர் பதவி வானதி ஸ்ரீனிவாசனுக்கு கிடைப்பதற்கே அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே வானதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.கருப்பு முருகானந்தம்

மீண்டும் பெண் ஒருவர் தலைவர் பதவிக்கு வர வாய்ப்பில்லை என்று பலரும் பேசிவரும் நிலையில் தமிழக பாஜகவில் அடுத்தமாநில தலைவராக வானதி ஸ்ரீனிவாசன் வருவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இது தவிர தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிடும் தலைவர்களின் முடிவுகள் ஒரு வேலை அவர்களுக்கு எதிராக அமைந்தால் அவர்களும் தலைவர் இடத்திற்கான போட்டியில் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.