ஐயப்ப பக்தர்களின் மண்டையை உடைத்த டோல் ஊழியர்கள்! – போராடுமா இந்து அமைப்புக்கள்?

 

ஐயப்ப பக்தர்களின் மண்டையை உடைத்த டோல் ஊழியர்கள்! – போராடுமா இந்து அமைப்புக்கள்?

மதுரை திருமங்கலம் அருகே தவறுதலாக ஃபாஸ்டேக் வரிசையில் வந்த வாகனத்தில் வந்த ஐயப்ப பக்தர்களின் மண்டையை டோல் ஊழியர்கள் உடைத்தனர். மேலும், ஐயப்ப பக்தர்களின் மாலையும் அறுக்கப்பட்டது. இதற்கு எல்லாம் இந்து அமைப்புகள் போராடுமா என்ற கேள்வி இந்துக்கள் மனதில் எழுந்துள்ளது.

மதுரை திருமங்கலம் அருகே தவறுதலாக ஃபாஸ்டேக் வரிசையில் வந்த வாகனத்தில் வந்த ஐயப்ப பக்தர்களின் மண்டையை டோல் ஊழியர்கள் உடைத்தனர். மேலும், ஐயப்ப பக்தர்களின் மாலையும் அறுக்கப்பட்டது. இதற்கு எல்லாம் இந்து அமைப்புகள் போராடுமா என்ற கேள்வி இந்துக்கள் மனதில் எழுந்துள்ளது.
சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேன் மூலம் சபரிமலைக்கு சென்றனர். இவர்கள் சென்ற வாகனம் மதுரை திருமங்கலம் டோல் பகுதிக்கு வந்தபோது, கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. அப்போது, காலியாக இருக்கிறதே என்று ஒரு வரிசைக்குள் சென்றுள்ளனர். அவர்களது வாகனத்தை தடுத்து நிறுத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள், இது ஃபாஸ்டேக் வண்டிகளுக்கான வரிசை. தவறாக வந்ததற்கு இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

வண்டியில் இருந்தவர்களோ, “ஃபாஸ்டேக் ஜனவரி 15ம் தேதி முதல்தான் அமல் என்று கூறியுள்ளார்கள். நீங்கள் அதற்குள்ளாக இருமடங்கு கட்டணம் வசூலிப்பது சரியில்லை… நாம் எல்லோரும் இந்தியர்கள்தானே, பிரச்னை வேண்டாம். நாங்கள் தவறாக வந்துவிட்டோம். திரும்பிச் சென்று வரிசையில் வருகிறோம்” என்று கூறி வண்டியை ரிவர்ஸ் எடுத்துள்ளார். ஆனால், வண்டியை நகர்த்த அனுமதிக்காத ஊழியர்கள் வண்டியை அடித்துள்ளனர். இதனால், கோபமான டிரைவர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் டோல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
வாக்குவாதம் முற்றி இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடன் ஐயப்ப பக்தர்களை சூழ்ந்துகொண்ட டோல் ஊழியர்கள், அவர்களை அடித்து, மண்டையை உடைத்து, போட்டிருந்த மாலை உள்ளிட்டவற்றை அறுத்து எறிந்தனர். படுகாயம் அடைந்த பக்தர்கள் உடனடியாக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து திருமங்கலம் போலீசில் புகாரும் செய்யப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், மற்ற ஐயப்ப பக்தர்கள் திரண்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாக நான்கு பேரை மட்டும் திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். 
ஃபாஸ்டேக் அமல் ஆவதற்கு முன்பே டோல் கேட் ஊழியர்கள் ஐயப்ப பக்தர்களிடம் பணம் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட அத்தனை பேரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் டோல்கேட் நிர்வாகத்தை தட்டிக்கேட்க இந்து அமைப்புகள் முன்வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.