ஐயப்பன் கோவில் தெப்பக்குளத்தில் கஞ்சா செடி.. அதிர்ச்சியில் பொதுமக்கள் !

 

ஐயப்பன் கோவில் தெப்பக்குளத்தில் கஞ்சா செடி.. அதிர்ச்சியில் பொதுமக்கள் !

பெரம்பலூர் ஐயப்பன் கோவிலில் தெப்பக்குளம் ஒன்று உள்ளது. அங்கு பொது மக்கள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைப் பயிற்சி மேற்கொள்வர்.

பெரம்பலூர் ஐயப்பன் கோவிலில் தெப்பக்குளம் ஒன்று உள்ளது. அங்கு பொது மக்கள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைப் பயிற்சி மேற்கொள்வர். அந்த குளத்தின் நடைபாதை ஓரங்களில் சரியான பராமரிப்பு இல்லாததால் அங்குச் செடிகளும், முட்புதர்களும் வளர்ந்து காணப்படுகின்றன. அந்த குளத்தில் இரவு நேரங்களில், ஆட்கள் அங்கே கஞ்சா புகைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. 

Temple

தெப்பகுளத்தில் வழக்கம் போல நடைப்பயிற்சியில் ஈடுபட்ட மக்கள் தெப்பக்குளத்தின் நடைபாதையில் கஞ்சா செடி வளர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இப்பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா புகைப்பது தான் இங்கே கஞ்சா செடி வளர்ந்திருப்பதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டிய பொது மக்கள், அங்கிருக்கும் கஞ்சா செடிகளை அகற்றி தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்று நகராட்சிக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.