ஐயப்பனுக்கு அணிவிக்கும் திரு ஆபரணங்கள் விவகாரம்; பந்தளம் அரண்மனை விளக்கம்

 

ஐயப்பனுக்கு அணிவிக்கும் திரு ஆபரணங்கள் விவகாரம்; பந்தளம் அரண்மனை விளக்கம்

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கு திரு ஆபரணங்கள் வழங்கப்பட மாட்டாது என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கு பந்தளம் அரண்மனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கு திரு ஆபரணங்கள் வழங்கப்பட மாட்டாது என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கு பந்தளம் அரண்மனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும் மதத் தலைவர்களுடன் ஆலோசித்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும் எனவும் தேவஸம்போர்டு அறிவித்துள்ளது.

இதனிடையே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகர விளக்கு திருவிழாவின் போது சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கு வழங்கப்படும் திரு ஆபரணங்களை வழங்க பந்தளம் அரண்மனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கு திரு ஆபரணங்கள் வழங்கப்பட மாட்டாது என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கு பந்தளம் அரண்மனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக தெரிவித்துள்ள அரண்மனை நிர்வாகம், பொய் பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.