ஐம்பொன் சிலைகள் திருட்டு.. 10 வருடங்களாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கைது !

 

ஐம்பொன் சிலைகள் திருட்டு.. 10 வருடங்களாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கைது !

தமிழ்நாட்டில் உலக புகழ்மிக்க ஐம்பொன்னால் ஆன சிலைகள் பல கோவிலில் உள்ளது.  பல வெளிநாட்டவர்கள் பார்த்து வியக்கும் அத்தகைய சிலைகள் கடந்த சில ஆண்டுகளாகத் திருடப்பட்டு வெளிநாட்டில் விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உலக புகழ்மிக்க ஐம்பொன்னால் ஆன சிலைகள் பல கோவிலில் உள்ளது.  பல வெளிநாட்டவர்கள் பார்த்து வியக்கும் அத்தகைய சிலைகள் கடந்த சில ஆண்டுகளாகத் திருடப்பட்டு வெளிநாட்டில் விற்கப்படுகிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல் பல்வேறு தமிழக கோவில்கள் சிலையை வெளிநாட்டில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தார். அவர் பதவியில் இருக்கும் போதே சிலை கடத்தலில் ஈடுபட்டோரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

ttn

குறிப்பாக, கடந்த 1982 ஆம் ஆண்டு கல்லிடைக்குறிச்சியில் உள்ள அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆலயத்தின் இருக்கும் ஐம்பொன் நடராஜர் சிலை காணாமல் போனது. சுமார் 36 வருடங்களுக்குப் பிறகு அந்த சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பதைக் கண்டுபிடித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன். மாணிக்கவேல் தலைமையிலான குழு அதனை மீட்டு வந்தது. 




திருச்சி கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த 31 ஐம்பொன் சிலைகள் கடந்த 2009 ஆம் ஆண்டு கொள்ளையடிக்கப் பட்டன. இந்த விவகாரத்தில் திருச்சியைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்  முத்துக்குமார் மற்றும் தமிழரசன் முத்துக் குமார் தலைமறைவாக இருந்தனர்.

ttn

இந்நிலையில், அவர்கள் இரண்டு பேரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் இரண்டு பேரும் கும்பகோணம் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.