ஐப்பசி மாத மேஷ ராசி பலன்கள்  

 

ஐப்பசி மாத மேஷ ராசி பலன்கள்  

மேஷ ராசிக்கு ஐப்பசி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

மேஷ ராசிக்கு அதிபதியாக செவ்வாய் விளங்குவதால் நீங்கள் மிகவும் தைரியமும், தன்னம்பிக்கையும் உடையவர்களாக விளங்குவீர்கள்.உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், சுக்கிரன் 7, 8-ல் புதன் 8-ல் குரு 9-ல் சனி, 10ல் செவ்வாய், கேது, 4-ல் ராகு ஆகிய கிரகங்கள் அமைந்து உள்ளனர்.

மேஷத்தின் யோகாதிபதி சூரியன் மாதம் முழுவதும் நீசநிலையில் இருந்தாலும் சுக்கிரனுடன் இணைந்து நீசபங்க அமைப்பில் இருப்பதால் உங்களுக்கு நன்மைகள் நடக்க தடையில்லை. எனவே ஐப்பசி மாதம் முழுவதும் எந்த விதமான பணச்சிக்கல்களோ, எதிர்ப்புகளோ உங்களுக்கு இருக்காது என்பது உறுதி.

mesaam

குருபகவானின் 7-ம் இடத்துப் பார்வை ஓரளவு சிறப்பான பலன்களைத் தரும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

ஆனால், பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்பதால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.

mesajkl

உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தொழில்,வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். போட்டிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆனாலும் சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும்.

mesamjki

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகளைப் பெறுவதற்குக் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். பெண் கலைஞர்கள் விஷயங்களில் தலையிடவேண்டாம். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

மாணவ, மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். கஷ்டப்பட்டு படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய், வியாழன்,

அதிர்ஷ்ட எண்கள் : 1,3,6,9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிகப்பு

சந்திராஷ்டம நாள்கள்: நவ: 9, 10

பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் , செவ்வாய்கிழமைகளில் அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வருவதும் மிகுந்த நன்மை பயக்கும்.