ஐப்பசி மாத மீன ராசி பலன்கள்

 

ஐப்பசி மாத மீன ராசி பலன்கள்

மீன ராசிக்கு ஜோதிட அடிப்படையில் ஐப்பசி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

மீன ராசிக்கு அதிபதி குருவாக இருப்பதால் உண்மைக்கும், நேர்மைக்கும் மட்டுமே பயப்படுவீர்கள் பெரும்பாலான மீன ராசி நேயர்கள் ஆசிரியராக இருப்பார்கள்.உங்கள் ராசிக்கு 8 –ல் சூரியன், சுக்கிரன்; 8, 9 –ல் புதன்; 9 –ல் குரு; 10-ல் சனி; 11 –ல் செவ்வாய், கேது; 5-ல் ராகு உள்ளனர்.

muruganhjk

ஐப்பசி மாதம் மீனத்திற்கு ஆனந்த மாதமாக இருக்கும். குறை என்று சொல்வதாக இருந்தால் எட்டில் மறையும் சூரியன் தொழில் ரீதியில் செலவுகளைத் தருவார் என்பதால் யோசித்து செலவு செய்வது நல்லது. அதேநேரம் ராசிநாதன் குரு ராசியைப் பார்ப்பதால் பெரிய அளவில் செலவுகள் எதுவும் வரப்போவது இல்லை.

அதற்கேற்ற வருமானமும் உண்டு. பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும். எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு. இளைஞர்களுக்கு எதிர்மறையான பலன்கள் நீங்கி, இனி நல்ல பலன்கள்  நடக்கும்.

meenamjk

சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். எட்டில் சுக்கிரன் இருப்பதால் தொழில் இடங்களில் கவனமாக இருங்கள்.

சீட்டுப் பிடிப்பவர்கள், மகளிர் சுயஉதவிக்குழு நடத்துபவர்கள், பணம் அதிகம் புரளும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வங்கித்துறையினர் போன்றவர்களுக்கு  நன்மைகள் நடக்கும். கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், மாதப் பிற்பகுதியில் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும்.

meenamjkii

மாணவ,மாணவியர்க்கு மாத ஆரம்பத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.மாதப் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள் : 1,3,9

அதிர்ஷ்டகிழமைகள் :  செவ்வாய் மற்றும் வியாழன்

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிகப்பு

சந்திராஷ்டம நாட்கள் : நவ: 6, 7, 8

பரிகாரம் : தினசரி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதும் உங்கள் வாழ்வில் மேன்மை கிடைக்கும்.