ஐப்பசி மாத மிதுன ராசி பலன்கள் 

 

ஐப்பசி மாத மிதுன ராசி பலன்கள் 

மிதுன ராசிக்கு ஐப்பசி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

மிதுன ராசிக்கு அதிபதியாக புதன் விளங்குவதால் நீங்கள் மிகவும் நேர்மையுடனும், சாமர்த்திய சாலியாகவும் விளங்குவீர்கள்.உங்கள் ராசிக்கு 5 –ல் சூரியன், சுக்கிரன்; 5, 6-ல் புதன்; 6-ல் குரு; 7-ல் சனி; 8-ல் செவ்வாய், கேது; 2-ல் ராகு உள்ளனர்.

மிதுனநாதன் புதன் ஐப்பசி மாதம் நீச சூரியனுடன் அமர்ந்தஇருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக அமைய உள்ளது.எதிர்கால நன்மைகளுக்கான சில மாற்றங்களும் இந்த மாதம் நடைபெறும்.ராசிநாதன் பலம் பெறுவதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு பஞ்சமில்லை.

mithunam

சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் யாத்திரை மற்றும் பிரயாண அனுபவங்கள் இருக்கும்.பதவி உயர்வு,சம்பள உயர்வுஎதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் உங்கள் சாதுர்யத்தை வெளிப்படுத்துவீர்கள்.  

புதன் வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும்.

mithunamgh

வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.அரசு மற்றும் தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே.

சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும்.

mithunamhjk

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது.உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசி வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆண் கலைஞர்களுக்கு பெண் கலைஞர்களாலும், பெண் கலைஞர்களுக்கு ஆண் கலைஞர்களாலும் நன்மைகள் ஏற்பட சாத்தியம் உள்ளது.

மாணவ மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட எண்கள் : 2,3,5,9

அதிர்ஷ்ட கிழமைகள் : புதன்,வெள்ளி

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை

சந்திராஷ்டம நாள்கள்: நவ: 13, 14, 15

பரிகாரம்: 

தினசரி வெறும் வயிற்றில் துளசி இலை சாப்பிடுவதும்,அருகில் உள்ள பெருமாள் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வதும் சகல நன்மைகளும் கிடைக்கும்.