ஐப்பசி மாத துலாம் ராசி பலன்கள்

 

ஐப்பசி மாத துலாம் ராசி பலன்கள்

துலாம் ராசிக்கு ஐப்பசி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

துலாம் ராசிக்கு அதிபதியாக சுக்கிரன் விளங்குவதால் எதிலும் தனித்துவம் மிக்கவராகவும் தன்னம்பிக்கை உடையவராகவும் விளங்குவீர்கள்.உங்கள் ராசிக்கு 1 –ல் சூரியன், சுக்கிரன்; 1, 2 –ல் புதன்; 2-ல் குரு; 3-ல் சனி; 4 –ல் செவ்வாய், கேது; 10-ல் ராகு உள்ளனர்.

துலாம் ராசிக்கு இது நினைத்தது நிறைவேறும் மாதமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். ஏற்கனவே உங்கள் மூலமாக உதவிகள் பெற்ற ஒருவர் அந்த நன்றிக்கடனை இப்போது திருப்பிச் செலுத்தும் மாதம் இது.

lakgthyu

மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் ராசியில் ஆட்சி வலு அடைவதாலும், சனிபகவான் சுபத்துவம் பெறுவதாலும் துலாமுக்கு இனி துன்பங்கள் இல்லை. கடந்த சில வருடங்களாக உங்களுக்கு என்ன கிடைக்கவில்லையோ அது இப்போது கிடைக்கும்.

நல்ல வேலை கிடைக்காத இளையபருவத்தினர் மனதிற்கு பிடித்த வேலையில் சேருவீர்கள்.சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.சுயதொழில் செய்பவருக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றம் உண்டு.

dimondhjk

ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான சில நிகழ்ச்சிகள் இந்த மாதம் நடக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் உண்டு. யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு தடைப்பட்ட வாய்ப்புகள் கைகூடி வரும். வருமானமும் அதிகரிக்கும். பாராட்டுகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

dimongdkl

மாணவ,மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம். பொழுதுபோக்குகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட எண்கள் : 6,9

அதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட நிறம் : திங்கள்,புதன்,வெள்ளி

சந்திராஷ்டம நாட்கள் : நவ:22,23

பரிகாரம் : அருகில் இருக்ககூடிய அம்மன் ஆலயங்களில் ராகு கால நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதால் உங்கள் வாழ்வில் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.