ஐப்பசி மாத கும்ப ராசி பலன்கள்

 

ஐப்பசி மாத கும்ப ராசி பலன்கள்

கும்ப ராசிக்கு ஜோதிட அடிப்படையில் ஐப்பசி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

கும்ப ராசிக்கு அதிபதியாக சனி பகவான் விளங்குவதால், உழைப்பை மட்டுமே நீங்கள் மூலதனமாக கொண்டு செயல்படுவீர்கள் . எடுத்தகாரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைப்பீர்கள்.உங்கள் ராசிக்கு 9 –ல் சூரியன், சுக்கிரன்; 9, 10 –ல் புதன்; 10-ல் குரு; 11-ல் சனி; 12 –ல் செவ்வாய், கேது; 6-ல் ராகு உள்ளனர்.

kumbamghj

ஐப்பசி மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் யோகாதிபதிகள் புதனும், சுக்கிரனும் வலுவான அமைப்பில் இருப்பதால் உங்களை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி ஆதரிக்கும் மாதமாக இது இருக்கும்.

சிலருக்கு எதிர்பாராத ஆட்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும். ராசிநாதன் சனியும் ராசியைப் பார்ப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள்.ராசியில் செவ்வாய் இருப்பதால் தேவையற்ற வகையில் யாரையாவது விரோதம் செய்து கொள்வீர்கள்.பேச்சில் கவனமாக இருங்கள்.

kumbamhjk

குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும்.சிலருக்கு வேலைமாற்றம்,தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும்.

மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். இதுவரை வியாபாரத்தில் பலத்த போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் போட்டியாளர் விலகுவதைக் காண்பீர்கள். வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

kumbamhjk

மாணவ,மாணவியர்க்கு கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். சந்தேகங்களை அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

அதிர்ஷ்ட எண்கள் : 2,6

அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள் மற்றும் வெள்ளி

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

சந்திராஷ்டம நாள்கள்: நவ: 4, 5

பரிகாரம் :  தினசரி ஆஞ்சநேய கவசம் கூறுவதும் ,அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதும் நன்மைகளை தரும்.