ஐப்பசி மாத கடக ராசி பலன்கள் 

 

ஐப்பசி மாத கடக ராசி பலன்கள் 

கடக ராசிக்கு ஐப்பசி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

கடக ராசிக்கு அதிபதியாக சந்திரன் விளங்குவதால் நீங்கள் மிகவும் அழகும், பொலிவும் நிறைந்தவராக விளங்குவீர்கள்.உங்கள் ராசிக்கு 4 –ல் சூரியன், சுக்கிரன்; 4, 5 –ல் புதன்; 5-ல் குரு; 6-ல் சனி; 7-ல் செவ்வாய், கேது; 1-ல் ராகு உள்ளனர்.

மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் இரண்டுக்குடைய தனாதிபதி சூரியனும்,சகாய ஸ்தானாதிபதி புதனும் இணைந்திருப்பதால் இந்தமாதம் கடகத்திற்கு பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் வேலை,தொழில்வியாபாரம் போன்றவற்றின் மூலம் நன்மைகள்  கிடைக்கும் மாதமாக இருக்கும்.

kadakamhj

ராசியில் இருக்கும் ராகு  இனம் தெரியாத கலக்கத்தை தருவார் என்பதால் எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது.பெண்கள் விஷயத்தில் நன்மைகள் நடக்கும். பெண்கள் உதவுவார்கள். பொதுவில் மேன்மைகளை தரும் மாதம் இது.

வியாபாரிகளுக்கு தொழில் நன்றாக இருக்கும். புதிய கிளைகள் தொடங்கவோதொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம். சிலருக்கு வெளிமாநிலவெளிதேச மாற்றங்கள் இருக்கும். சிலர் நீண்ட தூர பிரயாணங்கள் செய்வீர்கள்.

kadakamhj

மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குடும்பத்தில் சில கருத்து வேற்றுமைகளும் வீண் பிரச்னைகளும் வரும்.யாராவது ஒருவர் கோபப்படாமல் பொறுமையையும் நிதானத்தையும் கையாண்டு சிறிய விஷயம் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன்,வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும்.

சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம். அரசாங்க வகையில் கிடைக்கவேண்டிய அனுமதிகள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

kadakamghju

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்கள் : 2,3,5,9

அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள்,புதன்,வியாழன்

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள்

சந்திராஷ்டம நாள்கள்: நவ: 16

பரிகாரம்: தினசரி அபிராமி அந்தாதி படிப்பதும்,அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதும் பல்வேறு உன்னதமான பலன்களை தரும்.