ஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விபரம் வெளியானது

 

ஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விபரம் வெளியானது

13-வது ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள சி.எஸ்.கே கிரிக்கெட் அணியின் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

சென்னை: 13-வது ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள சி.எஸ்.கே கிரிக்கெட் அணியின் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

2020-ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெற உள்ளது. இது 13-வது ஐபிஎல் சீசன் ஆகும். இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு தோனி எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. இதனால் ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டத்தை காண்பதற்கு அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். எப்போதும்போல இந்தாண்டும் தோனியே சென்னை அணிக்கு கேப்டனாக களமிறங்குகிறார்.

ttn

சி.எஸ்.கே அணி: தோனி (கேப்டன்), நாராயண் ஜெகதீசன், ருத்துராஜ் கெய்க்வாட், கே.எம்.ஆசிப், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய், ஜோஷ் ஹஸல்வுட், கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், கரண் ஷர்மா, பியுஷ் சாவ்லா, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, இம்ரான் தாஹிர், தீபக் சஹார், பப்-டு-பிளிசிஸ், ஷர்துள் தாகூர், மிட்செல் சான்ட்னர், டிவைன் பிராவோ, லுங்கி நிகிடி, சாம் கரண், மோனு குமார், ஷேன் வாட்சன், சாய் கிஷோர்.

சென்னை அணிக்கு ஸ்டீபன் பிளமிங் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். வருகிற மார்ச் 29-ஆம் தேதி சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை அணியுடன் மோதுகிறது.