ஐபிஎல் 2019 போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு!

 

ஐபிஎல் 2019 போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு!

2019-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகளின் முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது

மும்பை: 2019-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகளின் முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், சியர் கேர்ள்ஸ், ஆட்டம், பாட்டம், மக்கள் கூட்டம் என கொண்டாட்டமாக நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் வருகிற 23-ம் தேதி முதல் மே மாதம் வரை நடைபெறவுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் இந்த போட்டிகளில் விளையாடும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு ராஜஸ்தான் மாநிலாம் ஜெய்பூரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.

இதையடுத்து, முதல் 17 போட்டிகள் அடங்கிய 2019-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ கடந்த மாதம் வெளியிட்டது. மீதி போட்டிகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

ipl

இந்நிலையில், 2019-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகளின் முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சென்னையுடன் பெங்களூரு அணி முதல் போட்டியில் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ipl

2010, 2011, 2018 ஆகிய ஐபிஎல் தொடர்களில் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த முறையும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களம் காணவுள்ளது. முதல் போட்டியே சென்னையில் நடைபெறுவதால் இது ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாக அமையும்.