ஐபிஎல் 2019 போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

 

ஐபிஎல் 2019 போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

2019-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

மும்பை: 2019-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், சியர் கேர்ள்ஸ், ஆட்டம், பாட்டம், மக்கள் கூட்டம் என கொண்டாட்டமாக நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் வருகிற மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறவுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் இந்த போட்டிகளில் விளையாடும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு ராஜஸ்தான் மாநிலாம் ஜெய்பூரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.

இந்நிலையில், 2019-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் 17 போட்டிகளுக்கான அட்டவனையை வெளியிட்டுள்ள, பிசிசிஐ மீதி போட்டிகளில் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. சென்னையுடன் பெங்களூரு அணி முதல் போட்டியில் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.