ஐபிஎல் போட்டியில் அதிக தொகைக்கு ஏலம் போன தமிழக வீரர் வருண் சக்ரவர்த்திக்கு பிடித்த நடிகர் யார்?

 

ஐபிஎல் போட்டியில் அதிக தொகைக்கு ஏலம் போன தமிழக வீரர் வருண் சக்ரவர்த்திக்கு பிடித்த நடிகர் யார்?

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரின் 12-வது சீஸனுக்கான வீரர்கள் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, தனக்கு பிடித்த நடிகர் யார் என்ற விவரத்தை பகிர்ந்துள்ளார்

சென்னை: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரின் 12-வது சீஸனுக்கான வீரர்கள் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, தனக்கு பிடித்த நடிகர் யார் என்ற விவரத்தை பகிர்ந்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் 12-வது சீஸனுக்கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.  இந்த ஏலத்தில் சர்வதேச போட்டிகளில் களமிறங்காத தமிழகக் கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவா்த்தியின் அடிப்படை விலை ரூ.20 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், அவரை ஏலத்தில் எடுக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேபிட்டல்ஸ் உள்ளிட்ட அணிகள் கடுமையாக போட்டியிட்டன.  இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ரூ.8.4 கோடி என்ற விலையில் வருண் சக்கரவர்த்தியை ஏலம் எடுத்தது.

 கடந்த டி.என்.பி.எல் தொடரில் மதுரை அணிக்காக களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி, அந்த அணி தனது முதல் டி.என்.பி.எல் கோப்பையைக் கைப்பற்ற முக்கியக் காரணமாக இருந்தார். இதன்மூலம் லைம் லைட்டுக்கு வந்த அவர், எதிர்வரவுள்ள ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு விலைபோன தமிழக வீரா் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய வருண், தான் நடிகர் விஜய்யின் மிகப் பெரிய ரசிகன் என்றும், எங்கிருந்தாலும் அவரது படத்தை முதல் நாளே பார்த்து விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டை தவிர்த்து ஸ்னிகர் சாக்லெட் பிடிக்கும் எனவும் வருண் தெரிவித்துள்ளார்.