ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கும் 9 தமிழக வீரர்கள் – யார் யார் தெரியுமா ?

 

ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கும் 9 தமிழக வீரர்கள் – யார் யார் தெரியுமா ?

ஐபிஎல் போட்டிகளில் 9 தமிழக வீரர்கள் களம் இறங்க உள்ளனர்.

ஐபிஎல் கொண்டாட்டம் கலை கட்டத் தொடங்கியுள்ளது.இந்த வருடம் நடக்கும்  12-வது சீசன் போட்டியை முன்னிட்டு முதல் 2 வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. மார்ச் 23-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

ipl cup

ஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலம், ஜெய்ப்பூரில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 351 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 228 இந்திய வீரர்கள், 123 வீரர்கள் வெளிநாட்டினர் ஆவர். காலியாக உள்ள 70 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற்றது. இதில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க 8 அணிகள் போட்டி போட்டன. ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் மொத்தம் 9 பேர் தமிழக வீரர்கள் ஆவர்.

தமிழக வீரர்கள் 

1. வருண் சக்கரவர்த்தி – பஞ்சாப் – ரூ. 8.40 கோடி

2. ஆர். அஸ்வின் – பஞ்சாப் – ரூ. 7.60 கோடி

3. தினேஷ் கார்த்திக் – கொல்கத்தா – ரூ. 7.40 கோடி

4. விஜய் சங்கர் – ஹைதராபாத் – ரூ. 3.20 கோடி

5. வாஷிங்டன் சுந்தர் – பெங்களூர் – ரூ. 3.20 கோடி

6. முரளி விஜய் – சென்னை – ரூ. 2 கோடி

7. நடராஜன் – ஹைதராபாத் – ரூ. 40 லட்சம்

8. ஜெகதீசன் – சென்னை – ரூ. 20 லட்சம்

9. எம். அஸ்வின் – ரூ. 20 லட்சம்

varun chakravarthy

இவர்களில் எதிர்பார்த்ததை விட  அதிக தொகைக்கு ஏலம்  போனவர், வருண் சக்கரவர்த்தி. இவரது அடிப்படை விலை ரூ. 20 லட்சம் என்ற போதும் இறுதியில் அவரை ரூ. 8.40 கோடிக்குத் தேர்வு செய்தது அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி. அதேபோல முருகன் அஸ்வினையும் அவருடைய அடிப்படை விலைக்கு பஞ்சாப் தேர்வு செய்தது.

 பாபா இந்திரஜித், பாபா அபரஜித், அனிருதா ஸ்ரீகாந்த், சாய் கிஷோர், ஆர். விவேக், ஆர். சஞ்சய் யாதவ், கே. விக்னேஷ் ஆகிய தமிழக வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காததால் அவர்களுக்கு 2019 ஐபிஎல்-லில் இடமில்லை.