ஐபிஎல் : தொடக்க விழா ரத்து – ராணுவ இசையுடன் துவங்க இருக்கும் ஐபிஎல்

 

ஐபிஎல் : தொடக்க விழா ரத்து – ராணுவ இசையுடன் துவங்க இருக்கும் ஐபிஎல்

சென்னை :

பன்னிரண்டாவது ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று துவங்குகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே இந்த முதல் போட்டி நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தலைமையிலும், பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் கோலி தலைமையிலும் களம் இறங்குகின்றன. கடந்த முறை காவிரி விவகாரத்தால் சென்னையில் போட்டிகள் நடைபெறாமல் போராட்டம் நடத்தப்பட்டது. 

ipl

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை செய்யவிருக்கின்றன. வழக்கமாக ஐபிஎல் போட்டிகள் என்றாலே தொடக்கவிழா கோலாகலமாக நடத்தப்படும். ஆனால் இன்று தொடங்கும் போட்டியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இன்றைய போட்டியின் முழு வருவாயும் கொடுக்கப்பட இருக்கிறது. அதனால் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், தொடக்க விழாவிற்கு ஆகும் தொகையையும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்குக் கொடுக்க ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ipl

 
எனவே, இதற்கு ராணுவ அதிகாரிகள் இன்று நடைபெறும் போட்டிக்கு வரவழைக்கப்பட்டு அத்தொகை ஐபிஎல் நிர்வாகிகள் ராணுவ வீரர்களிடம் வழங்கப்பட இருக்கிறது. இதில் முக்கியமாக போட்டி தொடங்குவதற்கு முன்னர் ராணுவ வீரர்களின் இசைக் கருவிகள் இசைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.