ஐபிஎல் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்..!

ஐபிஎல் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்..!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த முன்னாள் நியூசிலாந்து வீரர் மைக் ஹஸன் தனது பதவியில் இருந்து திடீரென விலகிக் கொண்டார். இதனால் தற்போது புதிய பயிற்சியாளரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நியமித்துள்ளது.

2016-17 ஆண்டுகளில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஒரு அணிக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்பை இவர் ஏற்கிறார். 

anil kumble

இதற்கு முன்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆரம்ப கட்ட சீசன்களில் கேப்டனாக இருந்து விட்டு, பின்னர் ஆலோசகராக பணிபுரிந்தார். அதன் பின்னர் சில ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆலோசகராக இருந்து வந்தார். அதற்கு அடுத்ததாக, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி கிடைத்தது. அதில் ஏற்பட்ட சில சர்ச்சைகள் காரணமாக, தனது பதவியைவிட்டு விலகினார். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு நிபந்தனைகளுடன் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளார். 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தவித்து வருகிறது. 2018ம் ஆண்டு சீசனில் ஏழாவது இடத்தை பெற்றிருந்தது. கடந்த சீசனில் ஆறாவது இடம் பெற்றது. இம்முறை பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்க பல திட்டங்களை வகுத்து வருகிறது.

kings 11 punjab

2020ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் துவக்கத்தில் இருந்து அனில் கும்ப்ளே பொறுப்பை துவங்குவார் என அணி நிர்வாகம் குறிப்பிட்டது.

-vicky