ஐபிஎல் ஏலம் முடிந்த பிறகு புதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பட்டியலை நாம் இங்கு காண இருக்கிறோம்,

 

ஐபிஎல் ஏலம் முடிந்த பிறகு புதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பட்டியலை நாம் இங்கு காண இருக்கிறோம்,

ஐபிஎல் ஏலம் துவங்குவதற்கு முன்பாக சென்னை அணி வெறும் 5 வீரர்களை மட்டுமே வெளியில் விட்டது. மீதமுள்ள 20 வீரர்களை தக்கவைத்துக் கொண்டது. இதன் மூலம் சென்னை அணிக்கு ஏலத்தில் எடுக்க 14.5 கோடி மட்டுமே வரம்பு கொடுக்கப்பட்டது.

stephen

கொல்கத்தாவில் நடைபெற்ற ஏலத்தில், முதலாவதாக 5.50 கோடிக்கு இங்கிலாந்து இளம் ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் சென்னைக்கு வாங்கப்பட்டார். இவர் கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, அதிர்ச்சி தரும் வகையில் 6.75 கோடிக்கு பியூஸ் சாவ்லா வாங்கப்பட்டார். இவர் நீண்டகாலமாக கொல்கத்தா அணிக்கு ஆடிவந்தது குறிப்பிடத்தக்கது.

piyush

மூன்றவதாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹஸல்வுட்டை 2 கோடிக்கு வாங்கியது.

மீதம் 35 லட்சம் மட்டுமே இருந்த நிலையில் சென்னை குழு தொடர்ந்து மவுனம் காத்துவந்தது. இதற்கிடையில் முதலாவதாக ஏலத்தில் எடுக்கப்படாமல் இருந்த சாய் கிஷோர் இரண்டாவதாக ஏலத்தில் அழைக்கப்பட்டார்.

sai

இவரை ஆரம்பவிலையான 20 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

புதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்:
பேட்ஸ்மேன்கள்: ஃபஃப் டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, எம் விஜய், ருதுராஜ் கெய்க்வாட், சுரேஷ் ரெய்னா

sam

பந்து வீச்சாளர்கள்: ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், கே.எம். ஆசிப், லுங்கி என்ஜிடி, ஷார்துல் தாகூர், பியூஷ் சாவ்லா (ரூ. 6.75 கோடி), ஜோஷ் ஹஸ்லவுட் (ரூ .2 கோடி), ஆர் சாய் கிஷோர் (ரூ .20 லட்சம்)

ஆல்ரவுண்டர்கள்: ஷேன் வாட்சன், டுவைன் பிராவோ, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், மோனும்குமார், கர்ன் சர்மா, சாம் குர்ரான் (ரூ .5.5 கோடி)

csk

விக்கெட் கீப்பர்கள்: எம்.எஸ்.தோனி (கேப்டன்), என் ஜெகதீசன்