ஐந்து நட்சத்திர ஹோட்டல் போலிருக்கும்  ஐ.ஆர்.சி.டி.சி எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச்-அழுக்கு ரூமை பார்த்து பழகியவர்களுக்கு அதிர்ச்சி …

 

ஐந்து நட்சத்திர ஹோட்டல் போலிருக்கும்  ஐ.ஆர்.சி.டி.சி எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச்-அழுக்கு ரூமை பார்த்து பழகியவர்களுக்கு அதிர்ச்சி …

ஐ.ஆர்.சி.டி.சி யின் செயல்  என்னை ஆச்சரியப்படுத்துகிறது. . . நிச்சயமாக ஒரு புத்திசாலித்தனமான குழு புதிதாக  செயல்படுகிறது என நினைக்கிறேன் என்கிறார் ஐ.ஆர்.சி.டி.சி எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச்க்கு போய்விட்டு வந்த  குகன்  சுவாமிநாதன்…

ஐ.ஆர்.சி.டி.சி யின் செயல்  என்னை ஆச்சரியப்படுத்துகிறது. . . நிச்சயமாக ஒரு புத்திசாலித்தனமான குழு புதிதாக  செயல்படுகிறது என நினைக்கிறேன் என்கிறார் ஐ.ஆர்.சி.டி.சி எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச்க்கு போய்விட்டு வந்த  குகன்  சுவாமிநாதன்…

irtc

“நான் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து  கொண்டிருந்தேன்,அப்போது  பாண்டியன் எக்ஸ்பிரஸ் 1 வது பிளாட்பாரத்தில் இருந்தது, என் பெட்டிக்கு  நடந்து சென்று கொண்டிருந்தேன், அப்போது அங்கு இந்த அழகாக ஒளிரும்,  வடிவமைக்கப்பட்ட இடத்தைக் கண்டேன். அழுக்கு ஓய்வுபெறும் அறைகளைப் பார்த்து பழகிய நம் கண்களுக்கு  இந்திய ரயில் நிலையங்களின் இந்த மாற்றம்  நிச்சயமாக ஒரு புதிய பார்வை.

irtc

எனவே ஐ.ஆர்.சி.டி.சி எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச் போர்டை படித்ததும்  அந்த இடத்தை பார்க்க விரும்பி.உள்ளே சென்றேன் .அங்கு ஒரு தனி வரவேற்பு பகுதி இருந்தது, அங்கிருந்தவர்கள் என்னை வரவேற்றனர், அவர்கள் வழங்கும் வசதிகளைப் பற்றி அவர்கள் விளக்கியபோது  நான் இது நம்ம ஊர் தானா என்று .திகைத்தேன்.”என்றார் குகன் சாமிநாதன்  . . 

madurai

இந்த எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச் ஐ.ஆர்.சி.டி.சி யின்  ஒரு புதிய முயற்சி, மதுரையில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இது அடுத்து , திருச்சியிலும்  அதைத்தொடர்ந்து மற்ற  முக்கிய நகரங்களிலும் வரப்போகிறதாம் . இந்த லவுஞ்சில் பல வசதிகள் உள்ளன, அவை மிகவும் குறைந்த  விலையில் கிடைக்கின்றனவாம் .

வெறும்  60 ரூபாயைக் கொடுத்து  நீங்கள் இந்த லவுஞ்சைப் பயன்படுத்தலாம், உங்களுக்கு இலவச வாட்டர் பாட்டில், வசதியான இருக்கைகள், செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள், இலவச வைஃபை, ஷூ ஷைனர் இயந்திரம் மற்றும்  மிகவும் சுத்தமான ஓய்வறையும்  கிடைக்கிறதாம் 

launge

நீங்கள் ஒரு நாள் பயணத்தில் இருந்தால், நீங்கள் ரூ .150 செலுத்தவேண்டும் , அங்கு ஷவர் மற்றும் உடை மற்றும் வசதியுடன் பேஸ்ட் , ஷேவிங் கிட், சோப், ஷாம்பு மற்றும் சீப்பு ஆகியவை அடங்கும். இங்கு    சுத்தமான குளியல் அறை உள்ளது. நீங்க  ரயிலில் இருந்து இறங்கியதும்  இங்கே refresh பண்ணிக்கிட்டு  நம்ம வேலைய பாக்கலாம் . இந்த அடிப்படை விஷயங்களுக்காக வெளியில் ஒரு அறையில் போய் தங்க வேண்டாம்   இந்த லவுஞ்சில் ஸ்டோர் ரூம்  இருப்பதால் 50 ரூபாய்க்கு 2 மணி நேரம் உங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைக்கலாம் 
ரெக்லைனர் அறையும்  ஒரு டிவியுடன் குளிரூட்டப்பட்டுள்ளது. அதற்கு  ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் கட்டணம் .
மேற்கூறியவற்றைத் தவிர, ஒரு வணிக மையம் உள்ளது, அங்கு பல வசதிகள் உள்ளது 
மேலும் , அவர்கள் ஒரு பெரிய சாப்பாட்டுப் பகுதியைக் கொண்டுள்ளனர், அங்கு  அவர்களின் பஃபேவில்  மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு 250 ரூபாயும் ., காலை உணவுக்கு 100 ரூபாயும் வாங்குகிறார்கள் 

madurai

இத்தகைய வசதிகளை  இந்த அரசாங்கத்தின் ஆதரவுடன் வழங்குவது ஐ.ஆர்.சி.டி.சியின் சிறந்த முயற்சியாகும். இதுபோன்ற விஷயங்களை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும், இந்த திட்டத்தின் வெற்றிக்காக இந்த பகுதிகள் முழுவதும் பராமரிக்கப்பட வேண்டும்.
 பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்காமல், வெளியில் இருந்து இந்த இடத்தைப் பார்ப்பது ஒரு நட்சத்திர  ஹோட்டல் போல உணரப்படுவதால் அவர்கள் உள்ளே வரப்போவதில்லை. . இந்த இடத்திற்கு குறைந்த  விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது பொதுமக்களுக்குத் தெரிந்தால் மட்டுமே அவர்கள் உள்ளே வருவார்கள்