ஐந்து தேர்தல்களை சந்திக்கும் வலிமை இருக்கிறது… டிடிவி தினகரன் ஆவேசம்!

 

ஐந்து தேர்தல்களை சந்திக்கும் வலிமை இருக்கிறது… டிடிவி தினகரன் ஆவேசம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் அடுத்தக்கட்ட தலைவருக்கான தேடுதலில், ஒருவரின் பெயரையும் ஏகமனதாக கட்சியினரால் முன்மொழிய முடியவில்லை. ஜெயலலிதா, ஊழல் வழக்கில் பெங்களூரு சிறை சென்ற போது, இருமுறை முதல்வராக வீற்றிருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு கட்சியினருக்குள் எதிர்ப்பு கிளம்பியதால், ஜெ.சமாதியில் தியானம் எல்லாம் செய்து போராட்டம் நடத்தினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் அடுத்தக்கட்ட தலைவருக்கான தேடுதலில், ஒருவரின் பெயரையும் ஏகமனதாக கட்சியினரால் முன்மொழிய முடியவில்லை. ஜெயலலிதா, ஊழல் வழக்கில் பெங்களூரு சிறை சென்ற போது, இருமுறை முதல்வராக வீற்றிருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு கட்சியினருக்குள் எதிர்ப்பு கிளம்பியதால், ஜெ.சமாதியில் தியானம் எல்லாம் செய்து போராட்டம் நடத்தினார். பலராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட டிடிவி தினகரன் தனி கட்சி துவங்கி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, ஒரு இடத்தையும் கைப்பற்றவில்லை. தனது கட்சிக்கு பொது சின்னம் கிடைக்கும் வரையில், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தினகரன் அறிவித்திருந்தார். இந்நிலையில், கட்சியினருக்கு புது தெம்பை அளிக்கும் வகையில், கட்சிக்குள் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். 

ttv

இந்நிலையில், கோயம்புத்தூரில் நடைப்பெற்ற அமமு கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய தினகரன், ‘சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதே இலக்கு’ என தெரிவித்தார். நாடாளுமன்ற இடைத்தேர்தல் தோல்வி என்பது நல்ல அனுபவம் எனவும் தேர்தல் தோல்விக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்றும் கூறினார்.
மேலும், ஒரு தேர்தலில் தோற்றதிற்காக அமமுக அழிந்து விடும் என நினைப்பது பகல் கனவு எனவும் இன்னும் ஐந்து தேர்தல்களை சந்திக்கும் வலிமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.