ஐநா சபையில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி! 

 

ஐநா சபையில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி! 

பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ஆம் தேதி ஐநா பொது சபையில் உரையாற்ற இருக்கிறார்.

ஐநா பொதுசபையின் 74ஆவது கூட்டம் வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. 2‌4ஆம் தேதி முதல் உலகத் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்ற இருக்கின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 24ஆம் தேதி பேசுகிறார். அந்த வரிசையில் 27ஆம் தேதி பிரதமர் மோடி ஐநா பொதுசபையில் உரை நிகழ்த்துகிறார். இரண்டாவது முறையாக பிரதமரான பிறகு ஐநா பொது சபையில் மோடி முதன்முறையாக பேசுகிறார்.

Modi

மோடி உரையாற்றிய பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையாற்ற உள்ளார். எனவே காஷ்மீர் விவகாரம் எழுப்பப்பட கூடும் என கூறப்படுகிறது. ஐநா கூட்டத்தில் பங்கேற்பதற்காக இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார். இந்த பயணத்தின் போது தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தியதற்காக பிரதமருக்கு பில்கேட்ஸ் ஃபவுண்டேசன் சார்பில் Global Goalkeeper விருது வழங்கப்பட இருக்கிறது. ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியிலும் மோடி உரையாற்ற இருக்கிறார்.