ஐதராபாத்தில் மாயமான பெண்ணை தேட தனிப்படை ! செல்போன், சிசிடிவி கைகொடுக்கவில்லை !

 

ஐதராபாத்தில் மாயமான பெண்ணை தேட தனிப்படை ! செல்போன், சிசிடிவி கைகொடுக்கவில்லை !

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ரோஹிதா அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி உள்ளார். இந்நிலையில் டிசம்பர் 26-ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பெண் திரும்பவில்லை. இந்த தகவல்கள் உறவினர்களுக்கு தெரியவர எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்குப்பதிந்த போலீசார் அவரது செல்போனை தொடர்பு கொள்ள முயற்சித்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மாயமான பெண்ணை தனிப்படை அமைத்தும் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ரோஹிதா அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி உள்ளார். இந்நிலையில் டிசம்பர் 26-ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பெண் திரும்பவில்லை. இந்த தகவல்கள் உறவினர்களுக்கு தெரியவர எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்குப்பதிந்த போலீசார் அவரது செல்போனை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அந்த பெண் செல்போனை வீட்டிலேயே வைத்து விட்டு சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளிலும் ரோகிதா தனது வீட்டில் இருந்து ஆட்டோவில் ஏறிச்சென்று காச்சிபவுலி பகுதியில் இறங்கி செல்வதை வரை உள்ளது. அதற்கு பின்னர் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் அவர் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை. அவர் பணியாற்றி வந்த தனியார் நிறுவனம் மற்றும் நண்பர்களிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ரோகிதாவை கண்டுபிடிக்க தனிப்படையும் அமைத்துள்ளது போலீஸ். போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், இதையடுத்து சமூகவலைதளங்கள் மூலம் தங்கள் மகளைக் கண்டுபிடித்து தரக்கோரி பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அந்தப்பெண் குறித்த தகவல்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு உதவி கோரியுள்ளனர். `வுமன் விஷன்’என்ற முகநூல் பதிவில் ஒரு பெண் மாயமாகி 9 நாள்கள் ஆகிவிட்டன. இதுவரை இந்த வழக்கில் ஒரு துப்புகூட கிடைக்கவில்லை. அவரைக் கண்டுபிடிக்க உதவுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இரண்டு தனிப்படை அமைத்து சைபராபாத் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.