ஐஐடி மாணவி தற்கொலை… களமிறங்கிய கேரள முதல்வர்!  விசாரணை வளையத்தில் பேராசிரியர்கள்!

 

ஐஐடி மாணவி தற்கொலை… களமிறங்கிய கேரள முதல்வர்!  விசாரணை வளையத்தில் பேராசிரியர்கள்!

சென்னை ஐஐடியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவி ஃபாத்திமா லத்திப் சனிக்கிழமையன்று விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் பாட தேர்வுகள் அனைத்திலும் வகுப்பில் முதலிடம் பெற்றுள்ளார் மாணவி. மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்னவென்பது சரிவர தெரியாத நிலையில்,

சென்னை ஐஐடியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவி ஃபாத்திமா லத்திப் சனிக்கிழமையன்று விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் பாட தேர்வுகள் அனைத்திலும் வகுப்பில் முதலிடம் பெற்றுள்ளார் மாணவி. மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்னவென்பது சரிவர தெரியாத நிலையில், இந்த வழக்கில் மாணவி கடும் மன உளைச்சலால் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

fathima

மாணவியின் மரணம் தொடர்பாக கேரள முதல்வருக்கும், பிரதமர் மோடிக்கும் மாணவியின் மரணத்திற்கான நீதி கேட்டு மாணவியின் தந்தை மனு அனுப்பியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
மாணவியின் தந்தை எழுதிய கடிதத்தை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன், பேராசிரியர்களின் துன்புறுத்தலின் பேரில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தந்தை புகாரளித்துள்ளார் என்றும் அவரது கடிதத்தில் தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து கோட்டூர்புரம் போலீசார் மாணவியின் தற்கொலை வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.