ஏ.ஜி.எஸ். திரையரங்குகள் அனைத்தும் மூடப்படும் – அர்ச்சனா கல்பாத்தி

 

ஏ.ஜி.எஸ். திரையரங்குகள் அனைத்தும் மூடப்படும் – அர்ச்சனா கல்பாத்தி

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் 119 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

 

 

கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பார்கள், கிளப்புகள், நீச்சல் குழந்தைகள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. கொரோனா வைரஸ் கொரோனா எதிரொலியால் தமிழகத்தில் மார்ச் 19ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை திரைப்படத்துறை, சின்னத்திரை, விளம்பரத்துறை உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழக அரசின் முடிவிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஏ.ஜி.எஸ். திரையரங்குகள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்படும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.