ஏவி 31 படக்குழுவினருடன் ஹோலி கொண்டாடிய அருண்விஜய் 

 

ஏவி 31 படக்குழுவினருடன் ஹோலி கொண்டாடிய அருண்விஜய் 

மருத்துவ முறைகேடுகளை மையமாக வைத்து குற்றம் 23 படத்தை இயக்கிய அறிவழகன், தற்போது மீண்டும் அருண் விஜய்யை வைத்து ஸ்பை த்ரில்லர் படத்தை பிரம்மாண்டமாக இயக்கவுள்ளார். ஏவி 31 என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.  

AV31

ஏவி 31 படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்கவுள்ளார். மேலும், இரண்டாவது ஹீரோயினாக புதுமுக நடிகை ஸ்டெஃபி பாட்டேல் இணைந்துள்ளார்.

AV31

சென்னை, ஹைதராபாத் மற்றும் டெல்லி பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. முதற்கட்டமாக ஏவி 31 படத்தின் படப்பிடிப்பு ஆக்ராவில் முழு வீச்சில் நடந்துகொண்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஏவி 31 படக்குழுவினர் ஆக்ராவில் வண்ணமயமாக ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.