ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்காதா? அதிர்ச்சி தரும் ஆய்வு

 

ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்காதா? அதிர்ச்சி தரும் ஆய்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 7 லட்சத்து 20 ஆயிரத்து 438 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 91 லட்சத்து 48 ஆயிரத்து 966 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 15 லட்சத்து 88 ஆயிரத்து 438 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,99,83,408 பேர்.

ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்காதா? அதிர்ச்சி தரும் ஆய்வு

கொரோனா தடுப்பூசியால் மட்டுமே கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க முடியும் என்ற நிலையை நோக்கி உலகநாடுகள் நகர்ந்துவிட்டன. எனவே, கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் சூழல் வந்துவிட்டது.

இது குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி தருகிறது. ஆய்வு முடிவாக என்ன சொல்கிறார்கள் என்றால், “உலகில் உள்ள பணக்கார நாடுகள், கொரோனா தடுப்பூசியை வாங்க ஆர்டர் செய்துவிட்டனவாம். அந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, பல முறை அவர்களுக்குத் தடுப்பூசி போடும் விதத்தில் ஆர்டர் செய்திருக்கிறார்களாம். கிட்டத்தட்ட 300 கோடி டோஸ் ஆர்டர் செய்யப்பட்டு விட்டதாம்.

ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்காதா? அதிர்ச்சி தரும் ஆய்வு

இப்படி பணக்கார நாடுகள் முந்திக்கொள்வதால் ஏழை மற்றும் வளரும் நாடுகளால் உடனே கொரோனா தடுப்பூசியைப் பெறுவது சிரமமாகி விடுமாம்” இந்த ஆய்வு பலரையும் அதிர்ச்சியைத் தருவதாகச் சொல்கிறார்கள்.

ஐநாவின் சுகாதார மையம் இந்த விஷயத்தைத்தான் தொடக்கம் முதலே சொல்லி வருகிறது. கொரோனா தடுப்பூசி தேவைப்படும் இடத்திற்கு கொண்டு சேர்க்கப்பட வேண்டும். இல்லையெனில், மனித இழப்புகளைத் தவிர்க்க முடியாது.