ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய தயாநிதிமாறன்!

 

ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய தயாநிதிமாறன்!

ஜட்காபுரம் பகுதியில் வசித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியிருக்கிறார். 

ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தன்னார்வலர்களும் அரசியல் கட்சிகளும் நேரில் சென்று உணவு வழங்க தமிழக அரசு தடை விதித்தது. இது தொடர்பாக திமுக சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மக்களுக்கு உதவ அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவையில்லை.. தகவல் தெரிவித்தால் போதும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் போட்டுக் கொண்டு செல்ல வேண்டும் என்றும 5 பேருக்கு மேல் செல்ல அனுமதி இல்லை என்றும் அறிவுறுத்தினர். அதன் படி தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என பலர் மக்களுக்கு உதவி வருகின்றனர். 

ttn

அந்த வகையில் திமுக எம்.பி தயாநிதிமாறன் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஜட்காபுரம் பகுதியில் வசித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியிருக்கிறார். 

tn

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஜட்காபுரம் பகுதியில் வசித்து வருகின்ற ஏழை எளிய குடும்பங்களுக்கு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்களான அரிசி, பருப்பு, உள்ளிட்ட உணவுப் பொருட்களையும், கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முக கவசம், கிருமிநாசினி, சோப்பு போன்றவைகளை துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் திரு பி கே சேகர்பாபு  அவர்கள் முன்னிலையில் வழங்கிய போது.” என்று குறிப்பிட்டு அங்கு எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.