ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.1.7 லட்சம் கோடி! 3 மாதங்களுக்கு இலவச கேஸ்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.1.7 லட்சம் கோடி! 3 மாதங்களுக்கு இலவச கேஸ்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கான பொருளாதார உதவிகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தன. இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ஏழைத் தொழிலாளர்களுக்காக ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கான பொருளாதார உதவிகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தன. இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, “யாரும் பசியில் இருக்கக் கூடாது என்பதற்காக ஏழைகள், தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவுகிறது. ஏழை தொழிலாளர்களாக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளுக்கு 50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு வழுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

poor-workers

ஏழை எளியோர் உணவுத் திட்டத்திற்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும். இதன் படி அடுத்த மூன்று மாதங்களுக்குக் கூடுதலாக ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும். கூடுதலாக ஒரு கிலோ பருப்பும் வழங்கப்படும்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

gas-cylinder-89

ஜன்தன் கணக்கு வைத்துள்ள 20 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.500 வீதம் 3 மாதங்களுக்கு வழங்கப்படும்” என்று கூறியுள்ளார். நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு ஏழைகள், தொழிலாளர்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.