ஏழு மாத பயணத்தில், ஈஜுபுரா சென்றடைந்தது கோதண்டராமர் சிலை!

 

ஏழு மாத பயணத்தில், ஈஜுபுரா சென்றடைந்தது கோதண்டராமர் சிலை!

திருப்பதி கோவில் சமதளத்தில் இருந்திருந்தாலோ, சபரிமலை ஐயப்பன் கோவில் மெட்ரோபாலிட்டன் சிட்டிக்கு நடுவில் இருந்திருந்தாலோ, இவ்வளவு பக்தர்களை ஈர்த்திருக்குமா? காடு, மலை, கடும்பயணம் என தாண்டி வரும்போதுதான், பக்தர்களுக்கும் இறையுணர்வு மிகும்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து 7 மாதங்களுக்கு முன்னர் மிகப்பெரிய இழுவை லாரியில் தன் பயணத்தை துவக்கிய கோதண்டராமர் சிலை, பல்வேறு தடங்கல்களை கடந்து  பெங்களூரு ஈஜிபுராவை சென்றடைந்தது. ஒரே பாறை, 64 அடி உயரம், 350 டன் எடை, 7 மாத பயணத்திற்குப் பிறகு ஈஜிபுரா வந்தடைந்த கோதண்டராமர் சிலையை பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டனர்.

Kothandaramar Statue

கொரக்கோட்டையில் இருந்து கிளம்பியது முதல், குறுகலான பாதை, சேதமடைந்த பாலங்கள், மாற்றுப்பாதை உருவாக்குவது, நீதிமன்ற வழக்கு என கோதண்டராமர் சிலை கடந்துவந்த பாதை  நெருக்கடி நிறைந்தது. திருப்பதி கோவில் ராமோஜிராவ் ஃபில்ம் சிட்டியில் இருந்திருந்தாலோ, சபரிமலை ஐயப்பன் கோவில் மெட்ரோபாலிட்டன் சிட்டிக்கு நடுவில் இருந்திருந்தாலோ, இவ்வளவு பக்தர்களை ஈர்த்திருக்குமா? காடு, மலை, கடும்பயணம் என தாண்டி வரும்போதுதான், பக்தர்களுக்கும் இறையுணர்வு மிகும்.

ஒருவேளை கோதண்டராமர் சிலை 7 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து கிளம்பி, அடுத்த இரண்டு மூன்று நாட்களில் பெங்களூருவை சென்று சேர்ந்திருந்தால், அது மற்றுமொரு சிலை. அவ்வளவுதான். இத்தனை மாத புவியியல், இயற்பியல் இடையூறுகளையும் தாண்டி சென்று சேர்ந்திருக்கும் கோதண்டராமரை தரிசிக்க வரும் பக்தர்கள் வேண்டும் வரம் பெறுவார்களாக!