‘ஏலம் எடுக்க யாரும் வரவில்லை’ : ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டருக்கு வந்த சோதனை!

 

‘ஏலம் எடுக்க யாரும் வரவில்லை’ : ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டருக்கு வந்த சோதனை!

ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரை யாரும் ஏலத்திற்கு எடுக்க முன்வராத நிலையில் இன்னும் அது சென்னை விமான நிலையத்திலேயே உள்ளது.

சென்னை: ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரை யாரும் ஏலத்திற்கு எடுக்க முன்வராத நிலையில் இன்னும் அது சென்னை விமான நிலையத்திலேயே உள்ளது.

jayalalitha

கடந்த 2016-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பரப்புரை உள்ளிட்ட பயணங்களுக்காக 11 பேர் பயணம் செய்யும்  பெல் 412 EP வகை ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கினார். இந்த ஹெலிகாப்டர்  மிகக் குறைந்த அளவே பயன்படுத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டர் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசியாகப் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து மாநில வணிக கழகத்திடம் இந்த ஹெலிகாப்டரை ஏலத்திற்கு விட ஒப்படைக்கப்பட்ட நிலையில் அது  சென்னை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. இதன் அடிப்படை விலையை ரூ.35 கோடி என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இதை ஏலம்  எடுக்க யாரும் முன்வரவில்லை. 

jayalalitha

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.  ஒருவேளை அடிப்படை விலையைக் குறைத்தால்  ஹெலிகாப்டரை ஏலம் எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.