ஏலத்தில் கிடைத்த 15.5 கோடி ரூபாயில் நாய்க்கு பொம்மை வாங்கபோகிறேன் – ஆஸி.வீரர் கம்மின்ஸ்

 

ஏலத்தில் கிடைத்த 15.5 கோடி ரூபாயில் நாய்க்கு பொம்மை வாங்கபோகிறேன் – ஆஸி.வீரர் கம்மின்ஸ்

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவராக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளார் கம்மின்ஸ் உருவாகியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவராக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளார் கம்மின்ஸ் உருவாகியுள்ளார்.

2015ல் ஐபிஎல்லில் யுவராஜ் சிங் ரூ. 16 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதே இதுவரை அதிக தொகையாக இருந்துள்ளது. ஆனால் 2020 ஐபிஎல் சீசனில் அவரது சாதனையை முறியடித்து விட்டார் கம்மின்ஸ். டெல்லி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என பல அணிகள் முயற்சி செய்தபோது கம்மின்ஸை 15.50 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

pat

ஏற்கனவே வெளிநாட்டு வீரர்களில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவராக பென் ஸ்டோக்ஸ் (2018 சீசனில் 14.5 கோடி ரூபாய்)  விளங்கினார். 

ben

இதற்கிடையே செய்தியாளர் சந்திப்பில் ஐபிஎல் ஏலத்தில் கிடைத்த பணத்தில் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, “இந்தப் பணத்தை வைத்து என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை. ஆனால் எனது காதலி பெக்கி பாஸ்டன், வளர்ப்பு நாய்க்கு இரண்டு பொம்மைகளை வாங்கலாம்” எனக் கூறினார். அவர்தான் என்ன என்ன வாங்க வேண்டும் என முடிவு செய்துள்ளார் என தெரிவித்தார்.

pat

மேலும், நல்ல குடும்பத்தினர், நண்பர்கள், சிறந்த அணி வீரர்கள் உள்ளிட்ட அன்பு செலுத்தும் மக்களின் மத்தியில் தான் இருப்பதாகக் கருதுகிறேன். எனக்கு கிடைத்த அனைத்திற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என கம்மின்ஸ் தெரிவித்தார்.