ஏற்ற இறக்கமாக இருந்த தங்க விலை இன்று அதிகரிப்பு!

 

ஏற்ற இறக்கமாக இருந்த தங்க விலை இன்று அதிகரிப்பு!

நேற்று, தங்க விலை  சற்று குறைந்த  நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.24 உயர்ந்துள்ளது

கடந்த சில நாட்களாக விலையில் ஏற்றத்தையும் இறக்கத்தையும் மாறி மாறி சந்தித்துக் கொண்டே வருகிறது தங்க விலை. நேற்று, தங்க விலை  சற்று குறைந்த  நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ஆபரணத் தங்கம் ரூ.28,664 க்கு விற்கப் படுகிறது. அதன் படி, கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 3,583 க்கு விற்கப் படுகிறது. 

Gold

மேலும், வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.50.10 க்கு விற்கப் படுகிறது. அதன் படி, ஒரு கிலோ தங்கம் ரூ.300 உயர்ந்து ரூ.50,100 க்கு விற்கப் படுகிறது.