ஏற்றத்துடன் முடிவடைந்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 39 புள்ளிகள் உயர்ந்தது….

 

ஏற்றத்துடன் முடிவடைந்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 39 புள்ளிகள் உயர்ந்தது….

தொடர்ந்து 2வது வர்த்தக தினமாக இன்றும் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 39 புள்ளிகள் உயர்ந்தது.

சீனாவுடான வர்த்தக போர் குறுகிய கால அளவிலேயே இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தெரிவித்து இருந்தார். மேலும், அந்நாட்டில் கடந்த மாதம் சில்லரை விற்பனை அதிகரித்துள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பித்து இருப்பது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. அதேசமயம், சில நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இல்லாதது, இந்தியாவின் மந்தமான பொருளாதாரம் போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பெரிய அளவில் ஏற்றம் காணவில்லை.

அமெரிக்கா-சீனா வர்த்தக போர்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், யெஸ் பேங்க், பவர்கிரிட், மாருதி, இண்டஸ்இந்த் பேங்க், ஆக்சிஸ் வங்கி, ஐ.டி.சி. மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டி.சி.எஸ்., வேதாந்தா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்பட 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.  

பங்கு வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,194 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,301 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 146 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவிதமாற்றுமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.73 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த புதன்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.140.56 லட்சம் கோடியாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 38.80 புள்ளிகள் உயர்ந்து 37,350.33  புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 18.40 புள்ளிகள் அதிகரித்து 11,047.80 புள்ளிகளில் முடிவு கொண்டது.