ஏற்றதுடன் நிறைவடைந்த பங்குச்சந்தை; நவம்பர் 7-ல் முஹூரத் வர்த்தகம்

 

ஏற்றதுடன் நிறைவடைந்த பங்குச்சந்தை; நவம்பர் 7-ல் முஹூரத் வர்த்தகம்

இந்திய பங்கு சந்தைகள் இன்றைய வர்த்தக நேர முடிவில் ஏற்றதுடன் முடிவடைந்தன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் முஹூரத் வர்த்தகம் நவம்பர் 7-ம் தேதி மாலை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மும்பை: இந்திய பங்கு சந்தைகள் இன்றைய வர்த்தக நேர முடிவில் ஏற்றதுடன் முடிவடைந்தன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் முஹூரத் வர்த்தகம் நவம்பர் 7-ம் தேதி மாலை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணையின் விலை குறைவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வது மற்றும் புதிய வெளிநாட்டு முதலீடுகள் முதலிய காரணங்களால், இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1.68 சதவீதம் அல்லது 579 புள்ளிகள் உயர்ந்து 35,011 புள்ளிகளை எட்டியது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 1.66 சதவீதம் உயர்ந்து 10,553 புள்ளிகளை எட்டியது.

ஆட்டோமொபைல், வங்கி மற்றும் எஃப்.எம்.சி.ஜி (FMCG) துறை பங்குகள் ஏற்றத்தைக் கண்டன.
ஐ.டி, ஃபார்மா மற்றும் பொதுத்துறை வங்கி பங்குகள் சரிந்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தின.

muhurat

மும்பை பங்குச்சந்தையில் வேதாந்தா 6 சதவீதமும், மாருதி சுசுகி 6.4 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 6.3 சதவீதமும் உயர்ந்து சென்செக்ஸ் பட்டியலில் முதல் இடம் பெற்றன. டெக்மஹிந்த்ரா, விப்ரோ, டி.சி.எஸ் மற்றும் இன்ஃபோசிஸ் அதிக சரிவை கண்ட பங்குகளாக இருந்தன. அதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில், 37 பங்குகள் உயர்வையும் 13 பங்குகள் சரிவையும் கண்டன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் “முஹூரத்” வர்த்தகம் நவம்பர் 7-ம் தேதி மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.